Connect with us

ஏனையவை

அரிசி விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி : எழுந்துள்ள சர்ச்சை

Published

on

3 9

அரிசி விலை தொடர்பான வெளியான புதிய வர்த்தமானி அறிவித்தல் பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே வெளியிடப்பட்டுள்ளதாகத் தேசிய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

எனினும், கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி விற்பனையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்கள் தொடர்பில் 1977 என்ற இலக்கத்திற்குத் தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் கொழும்பில் நேற்று (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பச்சையரிசி கிலோ கிராமொன்றுக்கு 210 ரூபாவும், நாட்டரிசிக்கு 220 ரூபாவும் சம்பா அரிசிக்கு 230 ரூபாவும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியாகியுள்ளது.

அத்துடன், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டரிசி கிலோ கிராமொன்றுக்கு 230 ரூபாவும், பச்சையரிசி கிலோ கிராமொன்றுக்கு 220 ரூபாவும், சம்பா அரிசி கிலோ கிராமொன்றுக்கு 240 ரூபாவும், கீரிசம்பா கிலோ கிராமொன்றுக்கு 260 ரூபாவும் அதிகூடிய சில்லறை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், நாட்டரிசி கிலோகிரா மொன்றுக்கு 225 ரூபாவும், பச்சையரிசி கிலோ கிராமொன்றுக்கு 215 ரூபாவும், சம்பா அரிசி கிலோ கிராமொன்றுக்கு 235 ரூபாவும், கீரிசம்பா கிலோ கிராமொன்றுக்கு 255 ரூபாவும் மொத்த விற்பனை விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த விற்பனை விலையானது மொத்த வர்த்தகர்களுக்கும், ஆலை உரிமையாளர்களும் உரித்தானதாகும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா (Mudith Perera) தெரிவித்துள்ளார்.

எனவே, ஆலைகளிலிருந்து பெறப்படும் விலைக்கே மொத்த விற்பனையாளர்களும் அரிசியை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. இதனால் அரிசி விற்பனையாளர்கள் விற்பனை செயற்பாடுகளிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்படும்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து, அரிசி உற்பத்தியாளர்களுக்கு மாத்திரம் மொத்த விற்பனை விலை செல்லுபடியாகும் வகையில் வர்த்தமானியொன்றை வெளியிட வேண்டும் என ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

ஜோதிடம்

17 11 17 11
ஜோதிடம்15 மணத்தியாலங்கள் ago

2025 இல் பண மழையில் நனையப்போகும் ராசிக்காரர்கள் : யார் தெரியுமா !

இன்னும் சில வாரங்களில் 2025 ஆம் ஆண்டில் நுழையவுள்ள நிலையில் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு ஆண்டில் வேறுபட்டிருக்கும். இதில் முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது பணவரவு...

tamilnaadi tamilnaadi
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 9 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 9.12.2024 குரோதி வருடம் கார்த்திகை 24, திங்கட் கிழமை, சந்திரன்...

tamilnaadi 9 tamilnaadi 9
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 30 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 30.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 15, சனிக் கிழமை,...

tamilnaadi 8 tamilnaadi 8
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 26 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 26.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 11, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 23 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 23.11. 2024, குரோதி வருடம் கார்த்திகை 8, சனிக் கிழமை,...

tamilnaadi 7 tamilnaadi 7
ஜோதிடம்3 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 நவம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.11.2024, குரோதி வருடம் கார்த்திகை 7 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்4 வாரங்கள் ago

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் : 7 நவம்பர் 2024 – Daily Horoscope Today ​​Horoscope இன்றைய ராசி பலனை (நவம்பர் 7, 2024 வியாழக் கிழமை) இன்று...