ஏனையவை
சிறகடிக்க ஆசை சீரியல் வெற்றி, வைஷ்ணவி திருமணம் முடிந்தது.. கல்யாண வீடியோ இதோ
சின்னத்திரையில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் வெற்றி வசந்த். youtube மூலம் பிரபலமாகி, சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான இந்த சீரியல் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. முத்து என்கிற கதாபாத்திரத்தில் வெற்றி வசந்த் கலக்கிக்கொண்டிருக்கும் நிலையில், சின்னத்திரை நடிகை வைஷ்ணவியை காதலிப்பதாக அறிவித்தார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை வைஷ்ணவி. இவர் ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானார்.
கடந்த சில வாரங்களுக்கு முன் இருவரும் தங்களது காதலை அறிவித்த நிலையில், தற்போது விமர்சையாக திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. வெற்றி – வைஷ்ணவி திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.