ஏனையவை
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கடும் நிலைப்பாட்டில் அநுர அரசு
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்கப்படும் அதேவேளை, வரியில்லா கார் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட மாட்டாது என அமைச்சரவை அறிவித்துள்ளது.
“ஒரு விடயத்தை நிறைவேற்றுவதற்கு வாகனம் வைத்திருப்பது அவசியம்” என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ நேற்று (26) ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “இருப்பினும், நாங்கள் யாருக்கும் கார் அனுமதிகளை வழங்க மாட்டோம்.”
தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி தேர்ந்தெடுக்கப்பட்டால், தங்கள் அரசாங்கம் வாகன அனுமதியைப் பெறாது என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
வாகன அனுமதிப்பத்திரம் கோரிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேசிய மக்கள் சக்தி கோரும் என ஜனாதிபதி அநு ரகுமார திஸாநாயக்க தனது ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்தார்.
மேலும், எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீட்டின் மூலம் அவசியமாகக் கருதப்படுபவர்களுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமைச்சரவை அறிவித்துள்ளது.
அர்ச்சுனாவை வைத்து திட்டமிட்டு தூண்டப்படும் இனவாதம் : கௌசல்யாவிற்கு திரும்பும் வாய்ப்பு
அர்ச்சுனாவை வைத்து திட்டமிட்டு தூண்டப்படும் இனவாதம் : கௌசல்யாவிற்கு திரும்பும் வாய்ப்பு
“இந்த எம்.பி.க்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டால், அவர்கள் அச்சுறுத்தல் மதிப்பீடு செய்யப்பட வேண்டும், என வைத்தியர் ஜயதிஸ்ஸ கூறினார். “கபினட் அமைச்சர்கள் கூட தேவையற்ற பாதுகாப்பு வசதிகளை வைத்திருக்க முடியாது, மேலும் அத்தியாவசியமற்ற கூடுதல் பாதுகாப்பை நாங்கள் வழங்க மாட்டோம்.”
நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைத் தவிர, முன்னாள் எம்.பி.க்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த அனைத்து காவல்துறை அதிகாரிகளும் செப்டம்பரில் திரும்ப அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்துள்ளது