சிம்புவின் படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க வந்த அஜித்.. வீடியோ இதோ
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி, பின் ஹீரோவாக களமிறங்கியவர் சிம்பு. இவரை தற்போது ஆத்மேன் என ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள்.
இவர் நடிப்பில் கடைசியாக பத்து தல படம் வெளிவந்த நிலையில், அதன்பின் இவர் கமிட் செய்து வைத்திருந்த STR 48ன் படப்பிடிப்பு சில காரணங்களால் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.
இதற்கிடையில், கமல் – மணி ரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
நடிகர் சிம்பு நடிகர் அஜித்தின் மிக தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். தன்னுடைய பல படங்களில் அஜித்தின் ரெபரென்ஸ் உடன் சிம்பு நடித்துள்ளார்.
இந்த நிலையில் சிலம்பாட்டம் படம் வெளிவந்து 16 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்காக நடிகர் அஜித் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.