ஏனையவை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு

Share
24 667696e08fefb
Share

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் விடுத்துள்ள விசேட உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சேதமடைந்த மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அதன் புனரமைப்பு பணிகளில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன், புனரமைப்புப் பணிகளைப் பூர்த்தி செய்ய இலங்கை இராணுவத்தின் உடனடி உதவியை வழங்குமாறு இராணுவத் தளபதிக்கு ஜனாதிபதி பணிபுரை விடுத்துள்ளார்.

மேலும், இருபது இலட்சம் காணி உறுதிகள் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த தகுதிபெற்ற 27,595 பேரில் 192 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கட்டடத்தில் இன்று (22) நடைபெற்றது.

உயர் தேசிய பொறியியல் நிறுவனத்தின் 252 ஆங்கில டிப்ளோமாதாரர்களுக்கு ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனங்கள் இதன்போது வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, மட்டக்களப்புக்கு இன்று பயணம் செய்துள்ள ஜனாதிபதி புதிய மாவட்ட செயலக கட்டட தொகுதியை திறந்து வைக்கவுள்ளார்.

அத்துடன், விவசாயத்தினை விரிவாக்கம் செய்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்களை மட்டக்களப்புக்கான பயணத்தின் போது ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளவுள்ளதுடன், கள விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...