tamilnaadi 4 scaled
ஏனையவைஜோதிடம்

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

Share

இன்றைய ராசி பலன் 20.04.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 20, 2024, குரோதி வருடம் சித்திரை 7, சனிக் கிழமை, சந்திரன் கும்ப ராசியில் சஞ்சரிக்கிறார். தனுசு ராசியில் உள்ள பூராடம், உத்திராடம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பல வகையான எண்ணங்கள் மனதை அலைக்கழிக்கும். எனவே நிலையான மனதோடு செயல்படவும். உங்கள் குடும்ப தொடர்பான பிரச்சனைகள் கவலை தரக்கூடியதாக இருக்கும். எந்த ஒரு சூழலையும் மிகவும் கவனமாகவும், நிதானமாக சிந்தித்து செயல்படவும். நிதி விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வருமான உயர்வு திருப்தியை தரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்படவும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. வேலையில் சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழிலில் புதிய முயற்சிகளில் கவனமாக ஈடுபடவும். உடல் ஆரோக்கியம், . உடல் நலனில் கவனம் தேவை. உங்கள் வேலையில் பொறுமையும், விடாமுயற்சியையும் கடைபிடிக்க நல்ல வெற்றியைப் பெறலாம். இன்று சவாலான சூழ்நிலைகளை உங்களின் அனுபவத்தால் வெற்றி பெறுவீர்கள். இன்று புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று அன்றாட வேலைகள் வெற்றி தரக்கூடியதாக இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பம் மற்றும் உறவினர்களிடமிருந்து அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். முக்கிய அவற்றில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். இன்று உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் கனவுகள் நனவாகும். தொழில் சார்ந்த விஷயத்தில் பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடின உழைப்புக்கான நற்பலனை பெற்றுவிடுவீர்கள். பணம் சம்பாதிப்பதில் வெற்றி கிடைக்கும். அன்பானவர்களுடன் நேரத்தை செலவிட முடியும்

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கூடிய நாள். சில அசாதாரணமான சூழ்நிலைகள் சந்திக்க நேரிடும். வேலைகளில் கவனம் தேவை இன்று நேர்மறையான சிந்தனையுடன் இருப்பதோடு, முடிவு எடுப்பதில் கவனம் தேவை.. உங்களின் வேலை, தொழில் தொடர்பான விஷயத்தில் பல வாய்ப்புகள் கிடைக்கலாம். வேலையில் முழு கவனம் செலுத்தி செயல்படவும். செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் வேலையில் எதிர்மறையான மாற்றங்களை சந்திக்க நேரிடலாம். எதிரிகளிடம் கவனமாக இருக்கவும். இன்று எந்த விஷயத்தையும் தன்மொழித்தனமாக நம்ப வேண்டாம். குடும்ப பிரச்சினைகளை நிதானமாக .உங்களின் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.உங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தவும். இன்று செலவுகள் அதிகரிப்பதும், பண பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று நல்ல பலன்களை தரக்கூடிய நாள். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டும், வேலைகளில் செல்வாக்கு நிறைந்த நாளாகவும் இருக்கும். தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உடல் நலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும்.பணம் சம்பாதிப்பது குறித்து அதிகம் யோசிப்பீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும்

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். உங்கள் வேலையில் பெரிய வெற்றியைப் பெறலாம். பிரச்சனைகளை சிறப்பாக சமாளித்தும் நிறுவீர்கள். பழைய முதலீட்டில் இருந்து நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் தெரிய வெற்றியை பெறலாம். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். சொத்து தொடர்பான பெரிய ஒப்பந்தங்கள் வந்து செய்ய வாய்ப்புள்ளது.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலை, குடும்ப விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படவும். உங்கள் கோபத்துடனும், உணர்ச்சிவசப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். என்ற மன அமைதியை பராமரிப்பது அவசியம். உணர்ச்சிவசப்பட்டு பேசுவது பிரச்சினையை தரும். நீண்டகாலமாக கிடப்பில் கிடந்த வேலையை முடிக்க முடியும்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். வேலையை செய்து முடிப்பதில் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்ததை விட சிறப்பான பலன்கள் கிடைக்கும். இன்று குடும்ப பிரச்சினைகளை மனதிறந்து பேசி தீர்வுக்கு அனுப்புவது நல்லது. முக்கியத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனம் செலுத்தி முடிப்பது நல்லது. வருமானம் திருப்தி தரக்கூடியதாக இருக்கும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் செயல்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய நாள். இன்று எந்த ஒரு முதலீட்டையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் வேலைகளை முடிப்பதில் சிரமங்கள் இருக்கும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதக பலனைத் தரும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாளாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் சந்திப்பீர்கள். உங்கள் இலக்குகளை அடைய ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள். குடும்ப பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். பண விஷயத்தில் தன்னிறைவு அடைவீர்கள் உங்கள் வேலைகளை முடிப்பதில் அர்ப்பணிப்புடன் செயல்படவும். இன்று திட்டமிட்டு செயல்பட எல்லா வேலையும் சிறப்பான வெற்றியை தரக்கூடியதாக இருக்கும்.

Share
தொடர்புடையது
images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...

24 66823570b714c
ஏனையவை

கேகாலை – மொலகொட பகுதியில் கோர விபத்து: இரண்டு பேருந்துகளுடன் லாரி மோதி இருவர் பலி!

கொழும்பு-கண்டி பிரதான வீதியில் கேகாலை, மொலகொட பல்பத்த பகுதியில் இன்று (09) மாலை இடம்பெற்ற பாரிய...

26 6960cb1db7fc8
ஏனையவை

கிரீன்லாந்து விவகாரம்: நேட்டோவின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் டிரம்ப் நிர்வாகத்தின் நகர்வு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை இணைப்பதில் காட்டி வரும் தீவிரம், இரண்டாம் உலகப் போருக்குப்...

w 1280h 720format jpgimgid 01ke937mtdxb7xrchhekg0a7eyimgname sonia gandhi admitted ganga ram hospital delhi pollution health update 2 1767684428621
ஏனையவை

இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி: டெல்லியில் தீவிர சிகிச்சை!

இந்தியத் தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சோனியா காந்தி, திடீர்...