24 660f8ffa751ee scaled
ஏனையவை

பல வருட போராட்டம்.. வசூலில் சாதனைகளை படைக்கும் ஆடு ஜீவிதம்

Share

பல வருட போராட்டம்.. வசூலில் சாதனைகளை படைக்கும் ஆடு ஜீவிதம்

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். லூசிபர் படத்தின் மூலம் இயக்குனராகவும் அறிமுகமானார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் ஆடு ஜீவிதம்.

நஜீப் என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பென்யமின் எழுதிய நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் ஆடு ஜீவிதம்.

மலையாளத்தில் மிகவும் பிரபலமான இயக்குனர் பிளஸ்ஸி இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்த நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

உலகளவில் தொடர்ந்து வசூல் சாதனைகளை படைத்து வரும் ஆடு ஜீவிதம் திரைப்படம் தற்போது ரூ. 100 கோடியை நெருங்கியுள்ளது.

16 வருட போராட்டத்திற்கு பின் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் இப்படம் ரூ. 98 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், நாளை ரூ. 100 கோடிக்கும் அதிகமான வசூலை குவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரமயுகம், ப்ரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ் என தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் மலையாள திரையுலகின் அடுத்த வெற்றி கனியாக மாறியுள்ளது ஆடு ஜீவிதம்.

Share
தொடர்புடையது
2024 11 25 Pudukkudiyiruppu MV 2
ஏனையவை

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு: 275 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வரும்...

images 7 2
ஏனையவை

டெல்லி கார் வெடிப்பு ‘தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்’: இந்தியாவுக்கு உதவியளிக்கத் தயார் என அமெரிக்கா அறிவிப்பு!

இந்தியத் தலைநகர் டெல்லியில் அண்மையில் இடம்பெற்ற கார் வெடிப்புச் சம்பவத்தை, ஒரு “தெளிவான பயங்கரவாதத் தாக்குதல்”...