24 660bb60107112 scaled
சினிமாசெய்திகள்

இஷா அம்பானியின் ரூ. 500 கோடி வீட்டை வாங்கியுள்ள ஹாலிவுட் பிரபலம்- யார் தெரியுமா?

Share

இஷா அம்பானியின் ரூ. 500 கோடி வீட்டை வாங்கியுள்ள ஹாலிவுட் பிரபலம்- யார் தெரியுமா?

ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையும், பாடகியுமாக இருப்பவர் ஜெனிஃபர் லோபஸ்.

இவர் சமீபத்தில் நடிகர் பென் அஃப்லெக் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பென் வோயேஜ் ஆஃப் தி மிமி என்ற கல்வித் தொடரில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் பியர்ல் ஹார்பர், ஆர்கோ, கான் கேர்ள் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

குறிப்பாக 2016ம் ஆண்டு பேட்மேன் Vs சூப்பர்மேன்: டான் ஆஃப்ட் ஜஸ்டிஸ் படத்தில் பேட்மேனாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

பென் மற்றும் ஜெனிஃபர் இருவரும் திருமணத்திற்கு பிறகு நியூயார்க் நகரில் வீடு தேடுவதாக செய்திகள் வந்தன.

இந்த நிலையில் இருவரும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானிக்குச் சொந்தமான ஒரு சொகுசு பங்களாவை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

38 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்த பிரம்மாண்ட சொகுசு பங்களாவை ரூ. 494 கோடிக்கு கொடுத்து வாங்கியுள்ளார்களாம்.

12 பெட்ரூம், ஒரு பெரிய நீச்சல் குளம், டென்னிஸ் பால் கோர்ட், ஜிம், ஸ்பா, சலூன், அவுட்டோர் கிட்சன் ஆகியவை இந்த வீட்டில் இடம்பெற்றுள்ளன.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...