ஏனையவை
கேபிஒய் பாலா செய்த உதவி.. கண்ணீருடன் காலில் விழுந்த எம்பிஏ பட்டதாரி..!
கேபிஒய் பாலா செய்த உதவி.. கண்ணீருடன் காலில் விழுந்த எம்பிஏ பட்டதாரி..
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பாலா, அதன் பின்னர் கேபிஒய் பாலா என்று அழைக்கப்படுகிறார் என்பதும் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டிருக்கிறார் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் ஏற்கனவே பல சமூக சேவை செய்து வரும் பாலா சமீபத்தில் எம்பிஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் ஒன்று வாங்கி கொடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி, உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட கேபிஒய் பாலா சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது தெரிந்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக அவர் சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது அவர் ஒரு சில பகுதிகளில் நேரில் மக்களை சந்தித்து அவர்களுக்கு ரொக்கமாக பணம் வழங்கி உதவி செய்தார் என்பதும் தெரிந்தது.
அதுமட்டுமின்றி சில பகுதிகளுக்கு அவர் ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்து உள்ளார் என்பதும் தன்னிடம் உதவி என்று கேட்டு வருபவர்களிடம் தன்னால் முயன்ற உதவியை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தான் சம்பாதிக்கும் பெரும் பணத்தை அவர் சமூக சேவைகளுக்காகவே செய்து வரும் நிலையில் அவரைப் பற்றி சில விமர்சனங்கள் இருந்தாலும் அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம்பிஏ படித்த பட்டதாரி ஒருவர் கால் நடக்க முடியாமல் மாற்றுத்திறனாளியாக இருப்பதால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. ஒரு மூன்று சக்கர வாகனம் இருந்தால் அவரால் வேலைக்கு செல்ல முடியும், ஆனால் அதே நேரத்தில் அந்த வாகனத்தை வாங்க அவரிடம் பணம் இல்லை என்ற நிலையில் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பாலா அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்துள்ளார்.
பாலாவின் உதவியை அறிந்து ஆனந்தக்கண்ணீர் விட்ட அந்த எம்பிஏ பட்டதாரி பாலாவின் காலில் விழுந்து நன்றி சொன்னார் என்றும் அவருக்கும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிவிட்டு பாலா சென்றதாகவும் தெரிகிறது. இது குறித்த வீடியோவை பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் பாலாவுக்கு மீண்டும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.