tamilni Recovered 21 scaled
சினிமாசெய்திகள்

பாத்து செய்யுங்க.. சன் டிவிக்கு வெங்கட் பிரபு வைத்த கோரிக்கை..!

Share

பாத்து செய்யுங்க.. சன் டிவிக்கு வெங்கட் பிரபு வைத்த கோரிக்கை..!

இந்த பதிவுக்கு இயக்குனர் வெங்கட் பிரபு கமெண்ட் செய்தால் நாங்கள் அவரது இயக்கத்தில் உருவான ’சென்னை 600028 ’படத்தின் பாடலை ஒளிபரப்புவோம் என சன் டிவி தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்த நிலையில் அதற்கு கமெண்ட் செய்த வெங்கட் பிரபு ’பார்த்து செய்யுங்க’ என்று கூறியுள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ’சென்னை 600028’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு உருவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பழைய திரைப்படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு வரும் நிலையில் ’சென்னை 600028 ’ படத்தையும் ரீரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அது மட்டும் இன்றி இந்த படத்தில் உள்ள சில காட்சிகளை சமூக வலைதளங்களை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இது குறித்த ட்ரெண்டிங் வீடியோவை சன் மியூசிக் சேனல் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’இப்ப இதுதான் டிரெண்டாமே, அதான் இப்படி அப்ரோச் பண்றோம், என்று கூறியதோடு இந்த வீடியோவுக்கு வெங்கட் பிரபு கமெண்ட் செய்தால் நாங்கள் ’சென்னை 600028 ’ படத்தின் வீடியோ பாடலை முழுதாக சன் மியூசிக் சேனலில் ஒளிபரப்புகிறோம் என்று தெரிவித்துள்ளது.

இதற்கு கமெண்ட் அளித்துள்ள வெங்கட் பிரபு ’பார்த்து செய்யுங்க’ என்று கூறியுள்ளார். இதையடுத்து விரைவில் இந்த படத்தின் பாடல் சன் மியூசிக் யூடியூப் சேனலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...