உலகம்

சீனாவில் அதிகரிக்கும் ஒருநாள் திருமணங்கள்

Published

on

சீனாவில் அதிகரிக்கும் ஒருநாள் திருமணங்கள்

தங்கள் மூதாதையருடன் சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு நாள் சீனாவில் திருமணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

சீனாவில் பின்பற்றப்படும் பழக்கவழக்கம்
சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள கிராமங்களில் தங்கள் மூதாதையருடன் சொர்க்கத்திற்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக ஒரு நாள் மட்டும் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அங்குள்ள கிராமங்களின் வழக்கப்படி தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை சரிவர பார்த்துக் கொள்ள முடியாமல் உயிரிழக்கும் ஆண்கள் அவர்களுடைய குடும்ப கல்லறையில் புதைக்க பட கூடாது.

அத்துடன் அவர்களால் தங்களுடைய மூதாதையர்களுடன் சொர்க்கத்திற்கு சென்று சேரவும் முடியாது என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது, மேலும் இதனால் உருவாகும் பாவம் பல தலைமுறைகளுக்கு தொடரும் என்ற நம்பிக்கையும் கிராமத்தினர் மத்தியில் நிலவி வருகிறது.

இதைப்போல ஆண்கள் அனைவரும் திருமணம் நிறைவடைந்த நபராக இருக்க வேண்டும், அப்போது தான் அவர்களால் சொர்க்கத்திற்கு சென்று சேர முடியும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

ஆண்கள் திருமணம் நிறைவடைந்தவராக இருக்க வேண்டும் என்பது போன்ற பழக்க வழக்கங்கள் சீனாவில் இருக்கும் காரணத்தால் கடந்த 5,6 ஆண்டுகளில் ஒரு நாள் திருமணங்கள் நாட்டில் அதிகரித்து வருகின்றன.

இதனால் உயிரிழந்த சில நபர்களை கூட இங்கு பெண்கள் சம்பிரதாயத்திற்காகத் திருமணம் செய்து கொள்கின்றனர்.

இதற்காக சீனாவில் தனியாக கம்பெனிகளும் நடத்தப்படுகின்றன, மேலும் இது போன்ற திருமணங்களுக்காக 3600 யுவான் கட்டணத்தில் (அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 41,400 ) தொழில்முறை மணமகள்களும் தனியாக உள்ளனர்.

தரகர்களின் தகவல்படி, இருவருக்கும் திருமணம் நடைபெறும் அப்படியே தங்களுக்கு திருமணம் நடந்து விட்டது என்பதை மூதாதையர்களுக்கு காட்டுவதற்காக அவர்கள் தங்கள் மூதாதையர்கள் கல்லறைக்கு செல்வார்,

பின் இருவரும் பிரிந்து சென்று விடுவார்கள் என தெரிவித்துள்ளார். இந்த திருமணம் எதுவுமே சட்டப்பூர்வமானது இல்லை, வெறும் சடங்கிற்காக நடத்தப்படும் திருமணம் மட்டுமே இது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version