நடிகர் அசோக் செல்வனுக்கு அடுத்த மாதம் திருமணம்! மணப்பெண் யார் தெரியுமா?
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூது கவ்வும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் அசோக் செல்வன்.
சமீபத்தில் இவர் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த போர் தொழில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சில தினங்களுக்கு முன்பு தான் இப்படம் ott வெளியானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அசோக் செல்வன், அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியனை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்களின் திருமணம் வருகிற செப்டம்பர் மாதம் 13 தேதி நெல்லையில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
Leave a comment