ஏனையவைதொழில்நுட்பம்

Elon Musk வெளியிட்ட அறைகூவல், சண்டையிடப்போகும் டுவிட்டர், மேட்டா நிறுவனங்கள்

Share

Elon Musk வெளியிட்ட அறைகூவல், சண்டையிடப்போகும் டுவிட்டர், மேட்டா நிறுவனங்கள்

Elon Musk வெளியிட்ட அறைகூவல், சண்டையிடப்போகும் டுவிட்டர், மேட்டா நிறுவனங்கள்
Elon Musk வெளியிட்ட அறைகூவல், சண்டையிடப்போகும் டுவிட்டர், மேட்டா நிறுவனங்கள்

கிறுக்குத்தனத்திற்கு பெயர் போன பணக்கார பட்டியலில் முதல் 10 இடங்களிற்குள் இருக்கும் எலோன் மஸ்க் நேற்று ஒரு அறிவிப்பை தன்னுடைய டுவிட்டர் கணக்கு மூலமாக வெளியிட்டு இருந்தார்.

Mark Zuckerberg, Elon Musk இவர்களுக்கு இடையிலான முறுகல் நிலை, அனைவருக்கும் தெரிந்த ஒன்று. டுவிட்டருக்கு போட்டியாக Thread என்ற ஒரு micro-blogging தளத்தினை கடந்த வாரம் Meta நிறுவனம் அறிமுகப்படுத்தியது அத்துடன் Instagram உடன் இணைந்து செயற்படுவதால் பயனரின் விருப்பங்களை சரியான புரிந்துகொண்டு, அவர்களுக்கு சிறந்த ஒரு தளத்தினை Thread உருவாக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை. இவ்வாறு இருவருக்கும் இடையிலான முறுகல் தொடர்ந்துகொண்டிருந்த போது, எலோன் மஸ்க் அறைகூவல் ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இந்த அறிவிப்பானது இணையவாசி மத்தியில் ஒரு பேசுபொருளாக மாறியிருக்கின்றது.
Elon Musk தன்னுடைய டுவிட்டர் கணக்கு வாயிலாக Meta நிறுவன நிறுவுனரான மார்க்கிற்கு ஒரு அழைப்பு விடுத்து இருக்கின்றார், “போட்டியில் வெற்றிபெறுபவர், தோல்வியடைந்தவரின் சமூக வலைத்தளங்களை 24 மணித்தியாலங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.” இந்த அறிவிப்பானது இணையவாசிகள் மத்தியில் பேசுபொருளாக இருப்பதுடன் பலரும் பலவிதமான கருத்துக்களை முன்வைத்தமுள்ளனர்.
அவர்கள் இருவருக்கும் போட்டி நடைபெற்றால் அதில் யார் வெற்றிபெறுவார்?
வெற்றிபெற்றவர் மற்றவருடைய சமூக வலைத்தளத்தை எடுத்துக்கொள்வாரா ?
அவ்வாறு எடுத்துக்கொண்டால் ஏதாவது மாற்றங்கள் செய்வரா?
இவ்வாறான பலகேள்விகளுக்கான பதிலை பொறுமையாக காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Share

3 Comments

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Tumbnail eduwire 113
ஏனையவை

க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு: புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் – பரீட்சை ஆணையாளர் நாயகம்!

நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, கல்விப் பொதுத் தராதர உயர்தரப்...

articles2FRbYMLy7admFnw5slJVju
ஏனையவை

பாபா வங்காவின் 2026 கணிப்பு: உலகப்போர் 3 அபாயம் – அமெரிக்கா, சீனா மோதல் உச்சம்!

புகழ்பெற்ற ஜோதிடக் கணிப்பாளரான பாபா வங்காவின் (Baba Vanga) கணிப்புகள் குறித்துச் சில சந்தேகங்கள் நிலவினாலும்,...

articles2FyiS73wPBBTEPNSERwl9g
ஏனையவை

முன் பிள்ளைப் பருவ கல்வி: 2027 முதல் புதிய பாடத்திட்டம் அமல் – பிரதமர் ஹரிணி அமரசூரிய அறிவிப்பு!

முன் பிள்ளைப் பருவத்தினருக்குத் தரப்படுத்தப்பட்ட ஆரம்பகால கல்வியை வழங்கும் நோக்கில், 2027 ஆம் ஆண்டு முதல்...