விஜய் ஆண்டனி நடித்த ‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ‘பிச்சைக்காரன் 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. இதில் விஜய் ஆண்டனி நடித்ததோடு மட்டுமல்லாமல் இயக்கியும் உள்ளார். இதில் காவ்யா தப்பார், ராதா ரவி, ஒயி ஜி மகேந்திரன், மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பிச்சைக்காரன் 2 போஸ்டர் இந்நிலையில், ‘பிச்சைக்காரன் -2’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார். மேலும், அந்த போஸ்டரில் விஜய் ஆண்டனியின் படங்களில் இதுதான் அதிக வசூல் பெற்ற படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#cinema
Leave a comment