பேஸ்புக் விருந்தில் இளம் பெண்கள் உட்பட பலர் கைது

Three people arrested 25465

பாணந்துறை, ஹோரதுடுவ பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேஸ்புக் விருந்தொன்றை சுற்றிவளைத்த பொலிஸார் 34 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 9 பெண்களும் உள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சோதனையின் போது சந்தேகநபர்கள் வசம் இருந்த கஞ்சா போதைப்பொருள் மற்றும் மதுபானங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் குழுவை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களை பெற்றோரை அழைத்து வந்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version