ஜனாதிபதி – விக்டோரியா சந்திப்பு

image 09a2dd4e4a
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கு ஆதரவளித்த விக்டோரியா நுலாண்டிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மீளும் வரையில் அதற்கு மேலும் ஆதரவளிப்பதாக நுலாண்ட் தனது உடன்பாட்டை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள விக்டோரியா நூலண்ட், அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார்.

மேலும் இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை விக்டோரியா நூலண்ட் உறுதி செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

#SriLankaNews

Exit mobile version