மருத்துவமனையில் த்ரிஷா!

39 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கும் திரிஷா! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகை த்ரிஷா திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான மணிரத்னம் இயக்கிய ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் குந்தவை என்ற கேரக்டரில் சூப்பராக நடித்த த்ரிஷாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா கடந்த சில நாட்களாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருந்த நிலையில் வெளிநாட்டிலிருந்து அவர் பதிவு செய்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை ரத்து செய்துவிட்டு நாடு திரும்பி விட்டதாகவும் கூறப்படுகிறது.

காலில் கட்டுப் போட்ட புகைப்படத்தை த்ரிஷா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து த்ரிஷாவுக்கு என்ன ஆச்சு என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் விரைவில் த்ரிஷா பூரண குணமடைந்து வீடு திரும்பவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ezgif 3 d0d3473124

#cinema

Exit mobile version