ஏனையவை
பச்சை மிளகாயை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?


நாம் அன்றாடம் உணவில் சேர்க்கும் பொருட்களில் ஓன்று பச்சை மிளகாய்.
பச்சை மிளகாய் உங்கள் உணவுக்கு சுவை சேர்ப்பது மட்டுமல்லாமல் நிறைய நன்மைகளை செய்ய வல்லது.
இத்தகைய ஆரோக்கியம் நிறைந்த பச்சை மிளகாயை நம் உணவுகளில் சேர்க்க வேண்டியது அவசியம். தற்போது இதில் இருக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சில சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவி புரிந்திடும். அதனால் காரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை பெறலாம்.
- பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் சரும தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.
- மிளகாய் உண்ணுவதால் ஏற்படும் மிக முக்கியமான உடல்நல பயன், அழற்சி குறையும்.
- கீல்வாதம் உள்ளவர்களுக்கு இது பெரிய நிவாரணியாக விளங்கும். மேலும் மிளகாய் என்பது உடலில் ஏற்பட்டுள்ள வலியை குறைக்கவும் உதவுகிறது.
- உடலில் உள்ள கொழுப்பு மற்றும் ட்ரைக்ளிசரைடு அளவுகளை குறைப்பதோடு மட்டுமல்லாமல், ஆபத்தான இரத்த உறைதலை உண்டாக்கும் இரத்தக் கட்டிகளை குறைக்க உதவுகிறது.
- மிளகாயில் அதிக அளவு சுண்ணாம்புச்சத்து உள்ளது. கால்சியம் என்பது திடமான பற்களுக்கும் எலும்புகளுக்கும் தேவைப்படுகிறது.
- உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கும், சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கும், மிளகாய் உட்கொள்ளுதல் நல்ல பயனை கொடுக்கும்.
- உடம்பில் உள்ள இரத்த ஓட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து, வாதம் ஏற்படாமல் காப்பதில் மிளகாய் முக்கிய பங்கு வகிக்கிறது.
- மிளகாயில் இருந்து வெளிப்படும் வெப்பம், கலோரிகள் உட்கொள்ளும் அளவை அதிகரித்து, கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.