ஹப்புத்தளையில் குளவிக் கொட்டு தாக்குதலுக்கு உள்ளாகி 13 தோட்ட தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றய தினம், கொட்டகலை டிரேட்டன் தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்களே இத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
அப்பகுதியிலிருந்த மரம் ஒன்றிலிருந்து கலைந்து வந்த குளவிகள் இவ்வாறு தொழிலாளர்களை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 13 பேரில் 2 ஆண்களும், 11 பெண்களும் உள்ளடங்குகின்றனர்.
Leave a comment