R
இலங்கைஏனையவை

ரணிலின் பயணங்களால் நாட்டுக்கு நன்மை இல்லை: திஸ்ஸ அத்தநாயக்க

Share

ரணிலின் பயணங்களால் நாட்டுக்கு நன்மை இல்லை: திஸ்ஸ அத்தநாயக்க

ரணில் விக்ரமசிங்கவின் வெளிநாட்டு பயணங்கள் மூலம் நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் கிடைக்கவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் ​போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் வௌிநாடுகளுக்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளார். எனினும் அதன் மூலம் நாட்டின் கடன் நிலுவைத் தொகைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கோ, பொருளாதார வளர்ச்சிக்கோ எதுவித நன்மையும் கிட்டவில்லை.

நிலையான அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்குப் பதில் தற்காலிக ஒட்டு போடப்பட்ட அரசாங்கமொன்று அதிகாரத்தில் இருப்பதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் மீதான நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்குத் தயக்கம் காட்டுகின்றன என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.R

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...

MediaFile 21
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் நாவாந்துறையில் 290 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள் கைது!

யாழ்ப்பாணம் – நாவாந்துறைப் பகுதியில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, ஐஸ் (Ice) போதைப்பொருளுடன் 5 சந்தேகநபர்கள்...

6.WhatsApp Image 2024 11 20 at 09.04.56
இலங்கைஅரசியல்செய்திகள்

மீனவர்களைப் பாதுகாப்போம், கடற்றொழில் துறையை நவீனமயமாக்குவோம்: அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி!

இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருவதாகவும், அவர்களை நிச்சயம் பாதுகாப்பதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும்...