ஏனையவை

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?

Share

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் நடக்கவுள்ள டுவிஸ்ட்- எலிமினேஷன் குறித்து வெளியாகிய சூப்பர் அப்டேட்- இது தான் காரணமா?
Vijay tv, news, current news, bigg boss 7

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் துவங்கிய நிலையில், முதல் வாரத்திலேயே நாமினேஷன் படலம் துவங்கியது. முதல் போட்டியாளராக அனன்யா ராவ் வெளியேறினார்.

இவரைத் தொடர்ந்து, பவா செல்லதுரை தன்னுடைய உடல் நலனை காரணம் காட்டி பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கூறினார். பின்னர் பிக் பாஸ் தரப்பில் இருந்து இவரிடம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில், கடைசியில் உடல்நிலை காரணமாக அவரை வெளியேற்றுவதாக பிக் பாஸும் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது 16 போட்டியாளர்கள் முட்டி மோதிக் கொண்டு தங்களுடைய விளையாட்டை வெளிப்படுத்தி, ரசிகர்களைத் கவர முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆறு சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் பல பிரச்சனைகள் அடுத்தடுத்து வெடித்து வருகிறது.

ஒரு வீடாக இருக்கும் போதே பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சினைகள் ஏற்படும் நிலையில், இரண்டு வீடு என்றால் சொல்லவா வேண்டும்?. இரண்டு குழுவாக பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக் கொள்வது மட்டுமின்றி, போட்டி பொறாமையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வௌயேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த வாரம் பவா செல்லத்துரை தானாக வெளியேறியதால் யாரும் வெளியேறப்போவதில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை எப்பிஷோட்டில் தெரிந்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...