6 38
ஏனையவை

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

Share

பரபரப்பாக பேசப்படும் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை குறித்து ஆர்.ஜே.பாலாஜி.. தெளிவா இருக்காரு

கடந்த சில தினங்களாகவே தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் நயன்தாரா-தனுஷ் பிரச்சனை தான்.

நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு, நயன்தாரா பியாண்ட் தி பேரி டேல் என்ற தலைப்பில் ஆவணப்படம் ஒன்று உருவானது. இது நேற்று நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

இந்த ஆவணப்படத்தின் டிரைலரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடித்தான் திரைப்படத்தின் சிறுகாட்சி இடம்பெற்றிருந்தது.

அந்த சின்ன வீடியோவிற்காக தனுஷ் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டு தன்மீதுள்ள தனிப்பட்ட வெறுப்பால் தனுஷ் பழிவாங்குகிறார் என நயன்தாரா பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்தார்.

தனுஷ்-நயன்தாரா பிரச்சனை குறித்து பலரும் பேசிவர அண்மையில் ஆர்.ஜே.பாலாஜிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நானும் அதை இணையத்தில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்.

ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், கூத்தாடி ரெண்டு பட்டால் ஊருக்கு கொண்டாட்டம் என்பதுபோல ஏதோ ஒன்று நடக்கிறது.

அனைவரும் பார்க்கிறோம், அதைப்பற்றி பேசுகிறோம். இதில் கருத்து தெரிவிப்பதற்கு எதுவும் இல்லை, தனுஷே அதற்கு பதில் சொல்லவில்லை, நாம் என்ன சொல்ல, அவர்கள் இருவருமே அதை பேசிக்கொள்வார்கள் என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
6 14
ஏனையவை

வெலிகந்தையில் பிள்ளையானின் சித்திரவதை முகாம் கண்டுபிடிப்பு – விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

வெலிகந்தையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) சித்திரவதை முகாம் இருந்த இடத்தை குற்றப்...

12 8
ஏனையவைஇலங்கைசெய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த உதவுமாறு ஐ.நா ஆணையாளரிடம் வலியுறுத்தல்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவுபடுத்தப்பட வேண்டும் என ஐ.நாவின் ஆணையாளரிடம் வலியுறுத்தியுள்ளதாக குரலற்றவர்களின் குரல்...

11 6
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கொடிகாமம் – பரந்தன் இடையே குறுந்தூர பேருந்து சேவை

கொடிகாமம் சந்தி தொடக்கம் பரந்தன் சந்தி வரையிலுமான குறுந்தூர பயணிகள் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏ-9 வீதியில்...

9 5
ஏனையவைஇலங்கைசெய்திகள்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விவகாரம் : அரசாங்கத்தை தலையிடுமாறு கோரிக்கை

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பு மற்றும் விரிவாக்கப்பட்ட பாடநெறி பிரிவின் கல்வி நடவடிக்கைகளை மீண்டும்...