உலகம்ஏனையவைசெய்திகள்

துணிக்கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை

Share

துணிக்கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை

அமெரிக்க நகரம் ஒன்றில், தன் சகோதரர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம், குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள Trussville என்னுமிடத்தில், Khloe Teresa Williamson என்னும் சிறுமி தன் அண்ணன் மற்றும் அக்காவுடன் விளையாடிக்கொண்டிருந்த நிலையில் மாயமாகியுள்ளாள்.

அதன் பிறகு, அவள் அழுக்குத் துணிகள் போடும் கூடைக்குள் சுயநினைவின்றிக் கிடப்பதை அவளது பெற்றோர் கண்டுபிடித்துள்ளனர்.

உடனடியாக Khloeயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், அவள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Khloe இறந்தது விபத்து என கருதப்படும் நிலையில், அவளது உடலுக்கு உடற்கூறு ஆய்வு செய்தும், அவள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரவில்லை. எனவே, கூடுதல் பரிசோதனைகளை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

Khloeயின் மரணம் அவளது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், பொலிசார் இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...