ஏனையவை

உதவி இயக்குநருடன் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்., நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

Share
Share

logo
Desktop

உதவி இயக்குநருடன் ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம்., நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்
Aishwarya,
Shankar Shanmugam,
Marriage,
Aditi Shankar,

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மகள் மீண்டும் திருமணம் செய்யவுள்ளார்.

முதல் கணவரை பிரிந்த ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா, உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுடன் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார்.

இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதை ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகை அதிதி சங்கர் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனை 2021-இல் திருமணம் செய்தார்.

ஆனால் சில மாதங்களிலேயே அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

மேலும், ரோகித் தாமோதரன் நடத்தும் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் பெண் வீராங்கனைகளிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் எழுந்ததையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஐஸ்வர்யா ரோஹித்திடம் இருந்து விவாகரத்து பெற்றார். அன்று முதல் ஐஸ்வர்யா தனது தந்தையுடன் தங்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி விட்டார்.

சமீபத்தில் ஐஸ்வர்யாவுக்கும் உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், வருங்கால ஜோடிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தருண் கார்த்திகேயன் உதவி இயக்குனர் மட்டுமல்ல. மேலும் பாடலாசிரியர் மற்றும் பின்னணி பாடகரும் ஆவார்.

Share
Related Articles
27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

30
இலங்கைஏனையவைசெய்திகள்

தேர்தல் கடமைகளுக்கு 65 ஆயிரம் பொலிஸார் நியமனம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக...

4 2
இலங்கைஏனையவைசெய்திகள்

தமிழ் அரசுக் கட்சியுடன் கைகோர்க்க தயார்! நிபந்தனைகளை வெளியிட்ட கஜேந்திரகுமார்

தமிழ் அரசுக் கட்சி சில தாம் எதிர்பார்க்கும் சில கொள்கைகளை தற்போது கொண்டிருக்குமாயின் அவர்களோடு இணைந்து...

3 2
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகில் மிகவும் வயதானவர் 116 வயதில் காலமானார்

உலகின் மிக வயதானவராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேசிலிய கன்னியாஸ்திரி சகோதரி இனா கனபரோ லூகாஸ்(Inah Canabarro Lucas),...