அமைச்சரவை உபகுழு ஆசிரிய தொழிற்சங்கத்தினருக்கு அழைப்பு!!
ஆசிரியர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்திப்பதற்கு அமைச்சரவை உபகுழு அழைப்பு விடுத்துள்ளது.
எனினும், இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தொழிற்சங்கத்தினரையும் ஒன்றாக சந்திப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து அதிபர் – ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment