நாம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் சோம்பு மருத்துவத்திற்குப் பயன்படும் ஓர் மூலிகைத் தாவரம் ஆகும்.
சோம்பில் உடலை சுத்தப்படுத்தும், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன.
குறிப்பாக இது உடல் எடையை குறைக்க உதவுவதாக சொல்லப்படுகி்ன்றது.
அந்தவகையில் சோம்பு தண்ணீர் எப்படி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது என்று பார்ப்போம்
- சோம்பு தண்ணீர் செய்வதற்கு, 1 லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க விட்டு இறக்கி, அதில் 2 டேபிள் ஸ்பூன் சோம்பை சேர்த்து அறை வெப்பநிலையில் குளிர வைத்து பின் தினமும் குடித்து வர வேண்டும்.மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
- சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புக்களை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
- ஆனால் சோம்பு தண்ணீரைக் குடித்து வந்தால், அது இயற்கையிலேயே பசியை அடக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளை சாப்பிடாமல் இருக்கலாம்.
Leave a comment