நன்மைகளை அள்ளி வழங்கும் நல்லெண்ணெய்
உடலுக்கு குளிர்ச்சியையும் உள்ளத்துக்கு புத்துணர்வையும் தருவதில் நல்லெண்ணெய்க்கு ஈடு இணையில்லை என்றே கூறலாம்.
நல்லெண்ணெய் ஆயுள்வேதத்தில் உடலை உற்சாகப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
உடலை மசாஜ் செய்வதில் நல்லெண்ணெய் முக்கிய பங்காற்றுகின்றது. இதன் மூலம் புத்துணர்வை அள்ளி வழங்குகின்றது.
நல்லெண்ணெயை தினமும் 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிப்படையும்.
நல்லெண்ணெயிலுள்ள அதிகப்படியான மக்னீசியம் இன்சுலின் சுரப்பை தடுத்து நீரிழிவு நோய் வருவதை முற்றிலுமாகத் தடுக்கின்றது.இது எலும்புகளில் கல்சியம் அதிகம் உண்டுபண்ணுகிறது.
எலும்புகளை வலுவாக்கவும் குடலியக்கம் சீராக செயற்படவும் செரிமானப் பிரச்சினைகளை தடுப்பதற்கும் பெண்கள் அதிகம் சாப்பிடுவது அதிக பலன்களைக் கொடுக்கும்.
உடல் வெப்பமடைந்து உடற்சூட்டால் அவதிப்படுபவர்கள் நல்லெண்ணையை சிறிது குடித்து வந்தால் உடல் வெப்பம் தணிந்து குளிர்ச்சி அதிகரிக்கும்.
நல்லெண்ணெய் குருதியில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பை கரைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
நல்லெண்ணெய்யை தினமும் பயன்படுத்துவதன் மூலம் மன அழுத்தத்தை குறைத்து மனநிலையை சமப்படுத்த முடியும். இரவில் நன்றாக உறங்கவும் கடுமையாக சோர்வில் இருந்து விடுபடவும் மூட்டுக்களில் ஏற்படும் வலியை நீக்கவும் பெரிதும் உதவுகின்றது.
உங்கள் தலைமுடி வறட்சியால் பாதிக்கப்படுறதா?
உங்கள் தலைமுடிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தி பராமரியுங்கள். நல்லெண்ணெயை தலையில் தடவி, மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் தலைமுடி வறட்சி நீங்கி மென்மையாக மாறும்.
நல்லெண்ணையை வாரம் முறை உடல் முழுவதும் தேய்த்து மசாஜ் செய்து குளித்து வந்தால் கண் எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், மண்டை குத்து போன்ற அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்யும்.
நீண்ட ஆயுளும் இளமையும் கைவரப் பெற வேண்டுமாயின் நம் முன்னோர்கள் எமக்களித்த அருமருந்தான நல்லெண்ணெய் பயன்படுத்துவோம்.
Leave a comment