வெந்தயக் கீரையின் அற்புத பலன்கள்
இன்றைய தலைமுறையினர் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய வெந்தயக் கீரை பற்றி அறிந்திருக்க வாய்ப்பின்றி இளமையிலேயே முதுமையைத் தேடிக் கொள்கின்றனர்.
வெந்தயம் போன்று வெந்தயக் கீரையிலும் ஏராள சக்திகள் ஒளிந்துள்ளன. அவை என்னவென இதுவரை நாம் அறிந்திருக்கமாட்டோம். அவற்றை இங்கு பார்ப்போம்.

வெந்தயக் கீரையின் குளிர்ச்சி தன்மை உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியை அளிக்க வல்லது.
சளி போன்ற நோய்களுக்கு வெந்தக்கீரை சாப்பிட்டு வந்தால் உடனடித் தீர்வு கிடைக்கும். வெந்தயக் கீரையை வெண்ணெய்யில் வதக்கி சாப்பிட்டால் மயக்கம், பித்தம் போன்றவற்றை சரிசெய்துவிடும்.
வெந்தயக் கீரையில் உள்ள விற்றமின்களும் தாது உப்புக்களும் சீரண சக்தியை செம்மைப்படுத்தி சொறி, சிரங்கு போன்றவற்றை நீக்குகின்றது. அத்துடன் பார்வைக் கோளாறுகளை சரி செய்கின்றது.
வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காசநோயை குணமாக்குவேதோடு வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது.
வெந்தயக் கீரையை வேகவைத்து கடைந்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் குடற்புண்கள் நீங்கி உடல் சுத்தமாகும்.
மலச்சிக்கிலையும் சரிசெய்து எரிச்சலையும் நீக்கக்கூடியது.

வெந்தயக் கீரையை சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும்.
நீரிழிவு உள்ளவர்கள் தொடர்ந்து 40 நாள்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.
நரம்புத் தளர்ச்சி உள்ளவர்களுக்கு வெந்தயக் கூரை ஒரு சிறந்த மருந்தாகும். நரம்புத் தளர்ச்சியிலிருந்து மீள இது வழிவகை செய்யும். அத்துடன் உடலில் செயலாற்றலை அதிகரித்து சுறுசுறுப்பை உண்டுபண்ணும்.
Leave a comment