40 வயது நபர்களை குறிவைக்கும் மாரடைப்பு!!- என்ன காரணம்??
அண்மைக்காலமாக 40 வயதே ஆன பலர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதற்கான பல செய்திகள் வெளிவந்துள்ளன.இன்னு்ம் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இது பற்றி பிரபல இதயநோய் நிபுணர்கள் தெரிவிக்கையில்,
கடந்த 10-15 வருடங்களைக் காட்டிலும் இன்றைய சூழலில் இளைஞர்களிடம் மாரடைப்பு என்பது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. குறிப்பாக கடந்த 2 வருடங்களில் இந்த மாரடைப்பின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.
அதுவும் 18 மறும் 20 வயது டீன் ஏஜ் பிள்ளைகள் கூட மாரடைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர்
இதற்கு முக்கிய காரணங்களாக இளைஞர்களிடம் அதிகரித்துள்ள புகைப்பிடித்தல் பழக்கம். இரண்டாவது அதிக அளவான மன அழுத்தம். இது வேலை அல்லது சொந்த வாழ்க்கை காரணங்களால் உண்டாகிறது.
மூன்றாவது மிக முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாமை மற்றும் மோசமான வாழ்க்கைமுறை என கூறுகின்றார்கள் மருத்துவர்கள்.
சிலர் அதிகமாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்கிறார்கள் எனில் அதன் பக்கவிளைவுகள் காரணமாகவும் மாரடைப்பை எதிர்கொள்கின்றனர்.
இதனை தவிர்க்க வேண்டுமெனில், உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, , நீரிழிவு நோய் இருப்பின் அவற்றையெல்லாம் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். அதற்காக தொடர்ச்சியாக மருத்துவரை அணுகி ஆலோசனைகள் பெற வேண்டும்.
அப்படி ஒருவேளை மேற்கூறிய பிரச்னைகள் எதுவுமே இல்லை எனில் தினமும் 30-45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள். குறிப்பாக இதயத்தின் இயக்கத்தை சீராக்கும் சைக்கிளிங், நீச்சல் , ஓட்டப்பயிற்சி போன்றவற்றை செய்யுங்கள்.
தொடர்ச்சியாக வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமலும் அவ்வப்போது குடும்பத்தினரிடமும் பேசுங்கள். அவர்களுடன் வெளியே செல்லுங்கள். பிடித்த விஷயங்களை செய்யுங்கள்.
டிவி பார்ப்பது , செல்ஃபோன் பார்ப்பது உங்கள் மன அழுத்தத்துக்கு தீர்வாகாது.
புகைப்பிடிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக தவிருங்கள். ஒரு நாளைக்கு ஒன்று என மாற்றிக்கொண்டாலும் அது நிவாரணம் கிடையாது. உங்கள் மகிழ்ச்சிக்கு எப்போதும் உத்தரவாதம் கொடுங்கள்.
தேவையில்லாமல் பிரச்சினைகளை மனதில் குப்பைகளாக சேர்த்து வைக்காதீர்கள்.
தினமும் 200-250 கிராம் காய்கறி, பழங்களை சாப்பிடுங்கள். உப்பு அதிகம் சேர்க்காமல் குறைத்துக்கொள்ளுங்கள். குளிர்பானங்களை முற்றிலும் தவிருங்கள்.
இவற்றையெல்லாம் முறையாக, சரியாக கடைப்பிடிக்கிறீர்கள் எனில் 95-98 சதவீதம் உங்களுக்கு எந்த பாதிப்பும் வர வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
1 Comment