துளசியின் மருத்துவ குணங்கள்!
துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது. துளசி சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மான்கனீஸ், காப்பர், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், ஓமேக் 3 பேட்டி ஆசிட் இதில் இருக்கிறது. வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது.
இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், வயதாவதை தள்ளிப்போடும்.மேலும் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க துளசி உதவும்.
பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பாக்ட்ரீயா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது. முகப்பருக்களுக்கு காரணமான கிருமிகளை, இது பரவாமல் தடுக்கும். நமது முகத்தில் உள்ள துளைகள் அடைபடும்போது முகப்பரு ஏற்படும் . இந்நிலையில் இதை தடுப்பதால், முகப்பரு ஏற்படாது. இந்நிலையில் துளசி, வேப்ப மரத்தின் இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால், இது முகப்பரு வராமல் தடுக்கும். வெயிலில் வெளியே சென்றால் சருமம் கருத்துவிடும்.
இந்நிலையில் துளசியில் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சி, சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவும். இதுபோல கரும் புள்ளிகளை சரியாக்க துளசியை பயன்படுத்தலாம்.
#Helthy
1 Comment