How to Maintain Deep Fryer Fry Oil
மருத்துவம்

இந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் ஆபத்தாம்! எச்சரிக்கை

Share

பொதுவாக சில உணவு பொருட்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

அத்தகைய உணவு வகைகள் பற்றி பார்ப்போம்

  • வேகவைத்த முட்டையை அறையின் வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருக்கும்போது அதில் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் பெருக தொடங்கிவிடும். அதனால் முட்டையை சமைத்த உடனே சாப்பிடுவதுதான் நல்லது.
  • பீட்ரூட்டை தொடர்ந்து சூடுபடுத்தி சாப்பிட்டுவந்தால் புற்றுநோய் உருவாகுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
  • உருளை கிழங்கை சமைத்தவுடன் சாப்பிடுவதுதான் நல்லது. ஏனெனில் சமைத்த உருளைக்கிழங்கு குளிர்ச்சி அடையும்போது அதில் குளோஸ்டிரிடியம் போட்டுலிசம் எனும் பாக்டீரியா பரவும். அது உடல்நலக்கோளாறுக்கு வித்திடும்.
  • சமைத்த கோழி இறைச்சியிலும் சால்மோனெல்லா பாக்டீரியா பெருக தொடங்கும். அதனால் இறைச்சியை நீண்ட நேரம் வைத்திருக்கக்கூடாது. சூடுபடுத்தி சாப்பிடவும் கூடாது.
  • எண்ணெய்யில் தயார் செய்த பலகாரங்களை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது. மீண்டும் சூடுபடுத்தும்போது பலகாரங்களில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நீங்கிவிடும். மேலும் எண்ணெய்யை மீண்டும் சூடேற்றும்போது அது நச்சு நீராவியை வெளியிடும். அதனால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.
  • கடல் உணவுகளை சமைத்த ஒரு மணி நேரத்திற்குள் சாப்பிட வேண்டும். நேரம் ஆக ஆக கடல் உணவில் விஷத்தன்மை ஏற்படக்கூடும். அதனால் மீண்டும் சூடுபடுத்தியும் சாப்பிடக்கூடாது.
  • கீரை வகைககளில் நைட்ரேட் அதிகம் கலந்திருக்கும். அதனை மீண்டும் சூடுபடுத்தும்போது நைட்ரேட் கார்சினோஜெனிக் நைட்ரோசமைன்களாக மாறி அது புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாகிவிடும்.

#Food #Health Tips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்குமருத்துவம்

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

துளசி இலையில் இத்தனை மருத்துவ குணங்களா? மூலிகையின் அரசி என்று அறியப்படும் துளசி செடியில் பல்வேறு...

tamilni 261 scaled
மருத்துவம்

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா?

உணவில் பூண்டு சேர்ப்பதால் இவ்வளவு பயனா? நாம் உணவு சமைக்கும் போது பலசுவைக்காக உணவுப் பொருட்களை...

tamilni 613 scaled
பொழுதுபோக்குமருத்துவம்

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..!

பனங்கிழங்கால் இத்தனை நன்மைகளா..! நமது தாயகப் பிரதேசத்தில் தற்போது பனங்கிழங்கு சீசன் ஆரம்பமாகி மும்முமாக விற்பனை...

download 3 1 14
மருத்துவம்

நீரிழிவு நோயாளிகள் கால் வீக்கத்தை தவிர்க்க பின்பற்றவேண்டியவை!

உடலுக்கு தேவையான இன்சுலின் சுரக்காமல் இருப்பதும், சுரக்கும் இன்சுலினை உபயோகிக்காமல் இருப்பதும் தான் என்பது நீரிழிவு...