ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மலையகத்தில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்களும், பேரணிகளும் முன்னெடுக்கப்பட்டன. நுவரெலியா, கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, பதுளை...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவசர கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதேவேளை, நாடாளுமன்றம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட தான் தயார்...
நாட்டில் அரசை பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில், நிலைமை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானத்தை எடுப்பதற்காக, கட்சித் தலைவர்கள் கூட்டத்தை அவசரமாகக் நடத்துவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன்,...
கொழும்பில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்துள்ளார். கோட்டாபயவுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் நிலைநிறுத்தப்பட்டிருந்த சிறப்பு அதிரடி படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் மக்கள் போராட்டத்தில்...
ஜனாதிபதி மாளிகை, போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களை தடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். எனினும், வீதித்தடைகளை உடைத்து, போராட்டக்காரர்கள் முன்னோக்கி சென்றனர். இதன்போது ஏற்பட்ட பதற்ற நிலையில் இரு பொலிஸ் அதிகாரிகள் உட்பட...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்துக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர், அதிரடியாக சினிமா பாணியில் ஆதரவு தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸ் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த,...
கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் இரண்டாவது தடவையாக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு...
இன்று கொழும்பில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியில் முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, போராட்டங்களை நிதானமாக பொலிஸார்...
ஜனாதிபதி கோட்டாப ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி கொழும்பில் இடம்பெறும் போராட்டத்துக்கு பேராதரவு பெருகிவருகின்றது. போராட்டத்தில் பங்கேற்பதற்காக நேற்று மாலை முதல் பெருமளவானவர்கள் கொழும்பு நோக்கி புறப்பட ஆரம்பித்தனர்....
மேல் மாகாணத்தில் சில பொலிஸ் பிரிவுகளில் நேற்றிரவு 9 மணி முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 8 மணிக்கு தளர்த்தப்படுகின்றது. இது தொடர்பான அறிவிப்பை பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ளது. நீர்கொழும்பு, களனி,...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் பல பகுதிகளிலும் இன்று போராட்டங்கள் இடம்பெறுகின்றன. கொழும்பை மையப்படுத்தி பிரதான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மலையகத்திலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன....
” பொலிஸ் ஊரடங்குச் சட்டம் என இலங்கை சட்டத்தில் எதுவும் கிடையாது. மக்கள் போராட்டத்தில் பங்கேற்பதை தடுக்கவே அரசு இப்படியான அறிவிப்பை விடுத்துள்ளது. ” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர், ஜனாதிபதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசையும் பதவி விலகச்செய்வதற்கான ஜனநாயகப் போரில் – மிக உக்கிரமாக மும்முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதால் கோட்டா – ரணில் அரசு கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால்...
கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்றும் நாளையும் கொழும்பில் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன. இந்நிலையிலேயே கொழும்பில் பாதுகாப்பு...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாளை மறுதினம் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு தமிழ் பேசும் கட்சிகள் ஆதரவை வெளியிட்டுள்ளன. தமிழ்த்...
” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர்...
காரைநகரில் இடம்பெற்ற வீதி மறிப்பு போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், வாகனங்களின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களுடன் பிரதேச செயலகம் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கலந்துரையாடி, வரிசையில் உள்ள வாகனங்களின் இலக்கங்களைப்...
ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமச்சந்திர உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் பொலிஸ் பஸ்ஸில் ஏற்றப்பட்டு, பொலிஸ் நிலையம் அழைத்துச்செல்லப்படுகின்றனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி...
கடந்த சில நாட்களாக அரசை எதிர்த்து லிபியாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டத்தில், கடந்த வெள்ளிக்கிழமை லிபியாவில் ஆளும் அரசை எதிர்த்து அரசு அலுவலங்களில் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்பட்டது....
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ‘மக்களை பட்டினிச்சாவிலிருந்து மீட்போம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்து போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் இதற்கான அழைப்பை...