களனி பல்கலைக்கழகத்திற்கருகில் நேற்று மாலை மாணவர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் 4 பிக்குகளும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
மின் கட்டண உயர்வுக்கு எதிராக நாளை (20) இரவு 7 மணிக்கு அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் பொது மக்களிடம் கேட்டுக்கொள்கிறது. இது தொடர்பில் மக்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய...
மார்ச் 1 ஆம் திகதி கூட்டுப் பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன. பல துறைகளில் தொழிற்சங்க பிரதிநிதிகள் நேற்று பிற்பகல் நடத்திய கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி,...
ஜனாதிபதியின் வருகை எதிர்த்து தமிழ்த் தேசிய கட்சியின் எம்.கே சிவாஜிலிங்கம் இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தார். போராட்டமானது காந்தி சிலைக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் அனந்தி சசிதரன், வேலன் சுவாமி, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய...
சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான்...
பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட 18 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இலங்கை ஜனாதிபதியின் பங்கேற்புடன் இடம்பெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை பகிஷ்கரிப்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போராட்டத்தில் ஈடுபட்ட...
யாழ்ப்பாண நகரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த...
தமிழ் மக்களினுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இதுவரை காலமும் தீர்வு வழங்கப்படாத நிலையிலும் பொருளாதார பின்னடைவு நேரத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் இரண்டாவது தடவையாக தேவையில்லை என கூறி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கு யாழ். பல்கலைக்கழக...
வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றஞ்சாட்டி வேலன் சுவாமிகளுக்கு யாழ்ப்பாண பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி...
கொழும்பு கோட்டையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சுற்றுவட்டார வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக,...
கடுமையான வரி அதிகரிப்பு எதிராக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில், எதிர்ப்பு பேரணியை முன்னெடுக்கின்றன. இதனால் கொழும்பின் பல வீதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது நடத்தப்படும் எதிர்ப்பு பேரணிக்கு எதிராக, கட்டளையை பிறப்பிக்குமாறு...
13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை...
கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய...
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து பல்கலைக்கழகம் மாணவர்கள் ஏற்ப்பாடு செய்த வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி இறுதி நாள் சற்று முன்னர் வெருகல் சித்திரவேலாயுத சாமி கோவில் இருந்து ஆரம்பித்துள்ளது. இதன்போது, தமிழர்...
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி பேரணி ஆரம்பமானது. பேரணியில் பல்கலைக்கழக மாணவர்கள், மத குருமார், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள் சிவில் அமைப்புக்கள் என...
அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வரிகளுக்கு எதிராக இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் இணைந்துள்ள தொழிற்சங்கங்கள், திங்கட்கிழமை (30) நண்பகல் துறைமுக பிரதான நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதிய வரிக் கொள்கையினால் தாம் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ள...
தென்னமெரிக்க நாடான பெருவில் அதிபராக இருந்த பெட்ரோ காஸ்டிலோ சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு அவசர நிலையை அறிவித்த காஸ்டிலோ பாராளுமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்.பி.க்கள் பாராளுமன்றத்தில்...
சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது வேகமெடுத்து வருகிறது. கடந்த சில நாட்களாக 40 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. வைரஸ் பரவல் அதிகரிப்பால் பல்வேறு மாகாணங்களில் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை கலைக்கும் வகையில், பொலிஸாரால் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர்த் தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது. கொழும்பு தாமரை தடாகத்திற்கு அண்மித்த பகுதியில் வைத்தே இந்த கண்ணீர்...
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள வசந்த முதலிகே, சிறிதம்ம தேரர் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி கொழும்புக்கு அமைதியான முறையில் பேரணியாக வரும் இரு பெண்களுக்கு பொலிஸாரால் இடையூறு...