ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகுவதற்கு திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் கட்சித் தலைமைப்பீடத்துக்கு அவர்கள் தெரிவுபடுத்தியுள்ளனர். மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கும் நோக்கிலேயே இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர். நாடாளுமன்ற...
மாகாணசபை தேர்தல் நடத்தப்படாது, மாகாணசபை முறைமை ஒழிக்கப்படும் என்றெல்லாம் அமைச்சர்களான விமல் வீரசன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர ஆகியோர் சூளுரைத்தனர். ஆனால், இந்தியாவின் அழுத்தத்தால் அரசு தேர்தலை நடத்த தயாராகின்றது. இது தொடர்பில் அமைச்சர்கள்...
இம்முறையும் எங்கள் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட வேண்டும் எனக் கேட்டால் அது என்னுடைய கடமை என ஏற்று மீண்டும் களத்தில் குதிக்கத் தயாராக இருக்கின்றேன் இவ்வாறு தமிழ் மக்கள் தேசியக்...
மாகாணசபைத் தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட உத்தேசித்துள்ளது என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. சுதந்திரக்கட்சி தலைமையில் ‘வெற்றிலை’ சின்னத்தின்கீழ் கூட்டணியொன்றை அமைப்தற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக் கூட்டணியில் விமல் வீரவன்ச, உதய...
“மாகாண சபை என்பது வெள்ளை யானை. இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்ட அந்த முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்...
“மாகாணசபை முறைமை என்பது இந்தியாவின் குழந்தையாகும். எனவே, அக் குழந்தை உயிருடன் இருக்கவேண்டும் என்பதையே அந்நாடு விரும்புகின்றது. அதனால்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகின்றது.” – என்று அமைச்சர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்....
2022 மார்ச் மாதமளவில் நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு மாவட்டத்தில் இம்முறை களமிறங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. கூட்டமைப்பு கொழும்பில் போட்டியிட வேண்டும் என...
“மாகாணசபைத் தேர்தலில் ரோஹித்த ராஜபக்ச எனக்கு சவால் கிடையாது. வடமேல் மாகாண மக்கள் எனக்கே ஆதரவு வழங்குவார்கள்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர அதிரடியாக அறிவித்துள்ளார். இலங்கையில் மாகாணசபைத்...
“இலங்கையை இந்தியாவின் மற்றுமொரு மாநிலமாகவா இங்குள்ள ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மாகாணசபை தேர்தல் எதற்கு ” – இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் ஓமல்பே சோபித தேரர். இது தொடர்பில் அவர் மேலும்...
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை பயணத்துக்கும்,...
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை உடன் மேற்கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். ” மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை நெருக்கடிக்குள்...
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கக்கூடும் என அறியமுடிகின்றது. மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், இதற்காக...
தமிழ்க் கட்சிகள் ஒருமித்துக்கோருவது அவசியம் எனவும் வலியுறுத்தல் “எதிர்காலத்தில் மாகாண சபைத் தேர்தல் எப்போது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக நிறைவேற்றப்பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபைத் தேர்தல் நடத்துவது அர்த்தமுள்ளதாக அமையும்.”...
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் இன்னும் இறுதியான – உறுதியான முடிவொன்றை எடுக்கவில்லை என்பது ஆளுங்கட்சி உறுப்பினர்களால் வெளியிடப்படும் கருத்துகள் மூலம் புலனாகின்றது. 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில்...
வடமேல் மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகி வருவதாக வெளியான செய்திகளை பிரதமரின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச மறுத்துள்ளார். அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், ஆனால் மக்களின் நலனுக்காக சமூகத் திட்டங்களில்...
ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்ற ஃபுமியோ கிஷிடாவுக்கு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜப்பானின்...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ஸ, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் களமிறங்க எதிர்பார்த்துள்ளதாக கடந்த சில காலமாகவே, தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு வெளிவரும் தகவல்களை, ரோஹித்த ராஜபக்ஸ இதுவரை...
ஜேர்மனியில் நாளையதினம் தேர்தல் நடைபெறவுள்ளது. பிரச்சாரத்துக்கான இறுதித் தினமான இன்று, அதிபர் பதவிக்காக போட்டியிடும் அரசியல்வாதிகள் தேர்தலில் முன்னிலை பெறுவதற்கான இறுதிக்கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் அங்கெலா மேர்க்கெலின் வலதுசாரி CDU கட்சிக்கும், சமூக...
கனடா நாடாளுமன்ற உறுப்பினராக மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி, தெரிவாகியுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் விடுலைக் கூட்டணியின் தலைவருமான வி.ஆனந்தசங்கரியின் மகனாவார். இவர்அண்மையில் நடைபெற்ற கனடா நாடாளுமன்ற தேர்தலில் ரொரண்டோவின்...
மீண்டும் பிரதமரானார் ஜஸ்டின் ட்ரூடோ! பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3 ஆவது முறையாகவும் வெற்றி பெற்றுள்ளது. கனடாவில் நேற்று (21) நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி 156 இடங்களில் வெற்றி, பெற்று...