சியானீஸ் மதுசன் என்ற இளைஞனின் உயரிய செயற்பாட்டை பாராட்டி வடவரணி கந்தசாமி ஆலய முன்றலில் கௌரவிக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம் வரணியை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த 9 ஆம் திகதி பல இலட்சம் பெறுமதிவாய்ந்த தங்க ஆபரணங்கள் அடங்கிய கைபையை விட்டுச் சென்றவர்களிடம் மீட்டுக் கொடுத்து பலராலும் பாராட்டப்பட்டார்.
குறித்த இளைஞனின் இந்த உயரிய செயலை பாராட்டி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் சி.பிரபாகரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி அவ் இளைஞனை கௌரவித்துள்ளனர்.
குறித்த இளைஞனின் தாயாரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த நிகழ்வில் பலர் கலந்து கொண்டதோடு, அனைவரும் அவ் இளைஞனை பாராட்டி வாழ்ந்து தெரிவித்தனர்.
#SriLankaNews
Leave a comment