இந்தியாவின் உத்திரபிரதேசம்- கான்பூரில், இதுவரை 66 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மதம் 23 ஆம் திகதி கான்பூரைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவர் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தமை இனங்காணப்பட்டது.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 66 பேருக்கு ஜிகா வைரஸ் வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 45 ஆண்கள் மற்றும் 21 பெண்கள் சீகா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை பகலில் கடிக்கக்கூடிய எய்டஸ் வகை நுளம்புகளால் சீகா வைரஸ் மனிதர்களுக்கு பரவுகிறது.
வெப்ப வலயங்கள் மற்றும் துணை வெப்ப வலய பகுதிகளில் அவ்வப்போது பரவி வரும் சீகா வைரசின் பிறப்பிடம் உகாண்டா ஆகும்.
கடந்த 1947 இல் முதன் முதலில் குரங்குகளிடம் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் 1952 இல் உகாண்டா மற்றும் தான்சானியாவில் மனிதர்களிடமும் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது எனவும் கூறப்படுகிறது.
பெரும்பாலும் தொற்று பாதித்த பலருக்கும் அறிகுறிகள் தென்படாது. தொற்று பரப்பும் நுளம்பு கடித்த 2 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்படும். இது ஒரு வாரம் வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
அதேநேரம் கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்படும்.
அல்லது பிறக்கும் குழந்தைகளுக்கு ஆபத்தான மூளை பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிறவி நோய்கள் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
#IndiaNews