யுகதனவி இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைவாக, அமெரிக்காவின் நிவ் போட்ரஸ் எனர்ஜி நிறுவனம், 250 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உட்புரளும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
அதன் முதல் தொகை எதிர்வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் கிடைக்குமென தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் பெரும்பான்மை பங்குகளை இந்தியாவின் அதானி குழுமத்திற்கு கையளிப்பது நிறைவடைந்துள்ளது.
அதனூடாக 650 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி நாட்டுக்கு கிடைக்க உள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
#SrilankaNews

