0a1c1610 6d1e73b1 yuhadanavi
செய்திகள்அரசியல்இலங்கை

யுகதனவி உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – ஜே.வி.பி

Share

அமெரிக்க நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்டுள்ள ‘யுகதனவி’ உடன்படிக்கை இரத்துச் செய்யப்பட வேண்டும் – என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

யுகதனவி உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்துக்கோ, அமைச்சரவைக்கோ அல்லது நாட்டு மக்களுக்கோ எதுவும் தெரியாது. முறைகேடான முறையிலேயே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்த உடன்படிக்கை எமது நாட்டுக்கு பாதகமானது. எனவே, ஒப்பந்தம் இரத்து செய்யப்பட வேண்டும். அவ்வாறு இரத்து செய்ய முடியுமா என சிலர் கேட்கலாம். முடியும் என்பதே பதில். ஏனெனில் மக்களின் அனுமதியின்றி எதனையும் செய்ய முடியாது.

எனவே, அரசு மீளப் பெறவேண்டும். மக்கள் ஆணையை மதித்து செயற்பட வேண்டும். சிலவேளை மேற்படி திட்டத்துக்காக அரசு கப்பம் பெற்றிருக்கக்கூடும். அதனால்தான் பின்வாங்க தயங்குகின்றனர்.”- என்றார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...