விடுதலைப் புலிகளின் புகைப்படங்களுடன் இருவர் கைது!

கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் புகைப்படங்களை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் நேற்று இரவு இவர்கள் கைதாகியுள்ளனர்.

வீதிச் சோதனையில் ஈடுபட்ட விசேட அதிரடிப் படையினர் நடத்திய சோதனையில் குறித்த இளைஞர்களின் கைத்தொலைபேசிகளில் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய புகைப்படங்கள் உள்ளன எனும் குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version