மட்டக்களப்பில் இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரம்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை!

21 6172cadf35a84 md

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவர் போக்குவரத்து பொலிஸார் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் தொடர்பான காணொலியை மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த காணொலியை பதிவிட்டுள்ள அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பொலிஸாரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. தற்போது இந்த சம்பவம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் காதுகளுக்கு சென்றடையும் என பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, மோட்டார்சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞர்களை போக்குவரத்துப் பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது, மோட்டார்சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மட்டக்களப்பில் இரண்டு இளைஞர்களைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் ஏறாவூர் காவல்துறை அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீர சேகர தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version