கலிபனாவ பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரும், அவருக்கு ஆதரவளித்த அவரது தாயாரும் மூன்று மாதங்களின் பின்னர் கொஸ்லந்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 வயதுடைய பாதிக்கப்பட்ட சிறுமி, அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு, அந்த இளைஞன் சிறுமியை அழைத்துக்கொண்டு கொழும்பு பகுதிக்குச் சென்று தலைமறைவாகியுள்ளார்.
தனது மகனும் சிறுமியும் கொழும்பில் இருப்பதை இளைஞனின் தாயார் அறிந்திருந்தும், அது குறித்து பொலிஸாருக்குத் தகவல் வழங்காமல் மறைத்துள்ளார். இதன் காரணமாக, குற்றத்திற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட தொடர் விசாரணைகளைத் தொடர்ந்து, கொழும்பு பகுதியில் தலைமறைவாக இருந்த இளைஞனும் சிறுமியும் கடந்த புதன்கிழமை (31) கண்டுபிடிக்கப்பட்டனர்.
தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட இளைஞன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமியைச் சட்டவிரோதக் காவலில் வைத்திருந்த குற்றச்சாட்டுகளின் கீழ் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.