முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பிரதேசத்திற்கு உட்பட்ட சிராட்டிகுளம் பகுதியில் இன்று அதிகாலை கட்டுத்துவக்கு துப்பாக்கியில் சிக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் உழவனேரி பகுதியினை சேர்ந்த 38 வயதுடைய தர்மலிங்கம் இளங்கோ என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்த இவர் மீட்கப்பட்டு மல்லாவி ஆதாரமருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து முல்லைத்தீவு நெட்டாங்கண்டல் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
#SrilankaNews
Leave a comment