கொவிட் தொற்றால் நேற்று மட்டும் 175 பேர் மரணம்!!

7a9511b8 801b 3820 95a5 36cb484ca528

நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்று 175 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 96 பேர் ஆண்கள் என்றும், 79 பேர் பெண்கள் என்றும் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உயிரிழப்புகளுடன் நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றால் உயிரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 864 ஆக உயர்ந்துள்ளது.

அதேவேளை, இன்று மாலை வரையில் மேலும் ஆயிரத்து 946 தொற்றாளர்கள் புதிதாக இனங்காணப்பட்டுள்ளனர என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version