ஹவுதி கிளர்ச்சியாளர்களை ஏமன்-சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடாத்தியுள்ளது.
ஏமன் – சவுதி கூட்டுப்படையினர் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 130 பேர் சாவடைந்துள்ளனர் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏமன் நாட்டின் மரீப் மாகாணத்தில் எண்ணைகிணறுகளை கைபற்றும் முயற்சியில் கடந்த மாசி மாதம் முதல் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் ஏமன் அரசு அவர்களைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மரீப் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது ஏமன் தலைமையிலான சவுதி கூட்டுப் படையினர் பதுங்கியிருந்து தொடர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் மரிப் மற்றும் அல்-பைதா மாவட்டத்தில் தாக்குதல் நடத்திய போது ஹவுதி அமைப்பைச் சேர்ந்த 130 பேர் சாவடைந்ததாகவும் அவர்கள் பயன்படுத்திய 16 ஆயுதம் தாங்கிய வாகனங்களும் தகர்க்கப்பட்டதாகவும் அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கூட்டுப்படையினர் தாக்குதலில் கடந்த ஒரு மாதத்தில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் 1200 பேர் வரை சாவடைந்துள்ளார்கள்.
கடந்த இரண்டு கிழமைகளுக்கு முன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள்145 பேர் கூட்டுப்படையினரின் தாக்குதலில்
சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
#WORLD
Leave a comment