செயற்கைகோளை ஏவியது ஜிம்பாப்வே

1788433 nonostalite

ஜிம்பாப்வே முதல் முறையாக சிறிய அளவிலான நானோ செயற்கைகோளை விண்ணில் ஏவியது. அமெரிக்காவின் வர்ஜீனியாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டில் ஜிம்சாட்-1 என்று பெயரிடப்பட்ட நானோ செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது.

மேலும் ஜப்பான் விண்வெளி கழகத்தின் பல நாடுகளின் திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டாவின் முதல் செயற்கைகோளும் ஏவப்பட்டது. இது தொடர்பாக ஜிம்பாப்வே அரசின் செய்தி தொடர்பாளர் நிக் மங்வானா டுவிட்டரில் கூறும்போது, வரலாறு விரிவடைகிறது.

ஜிம்சாட்-1 தற்போது விண்வெளியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது நாட்டுக்கு ஒரு அறிவியல் மைல்கல் என்றார். ஜிம்பாப்வே ஏவிய நானோ செயற்கைகோள், பேரிடர்களை கண்காணிக்கவும், விவசாயத்தை மேம்படுத்தவும், கனிம வளத்தை மேம்படுத்தவும் உதவும்.

#world

 

Exit mobile version