உக்ரேனிய ஜனாதிபதியைக் கொல்ல பாதுகாப்பு அதிகாரிகளே சதி: அம்பலமான பகீர் சம்பவம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் குழுவில் இருவர் திட்டமிட்டதாக வெளியான தகவலை அடுத்து, அதன் தலைவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை படுகொலை செய்ய திட்டமிடுவதாக உளவுத்துறை கண்டறிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் இருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான ஆணையில் Serhiy Rud என்பவரை நீக்குவதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார். ஆனால் அந்த பொறுப்புக்கு இதுவரை எவரையும் அடையாளம் காணவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, பாதுகாப்பு சேவை அதிகாரிகள் தரப்பு இந்த வாரம் ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்த இருவரை கைது செய்துள்ளதுடன், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மற்றும் உயரதிகாரிகளை படுகொலை செய்ய திட்டம் தீட்டியதாக குற்றஞ்சாட்டினர்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புதிதாக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கான பரிசாக இந்த திட்டத்தை முன்னெடுக்க இருந்ததாகவும் விசாரணையில் அம்பலமானது.
மட்டுமின்றி, ரஷ்ய பாதுகாப்பு சேவையின் அதிகாரிகளே இந்த இருவரையும் ரகசியமாக களமிறக்கியுள்ளதாகவும், இவர்கள் முக்கிய ஆவணங்களை ரஷ்யாவுக்கு கசியவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஜெலென்ஸ்கியை கடத்திச் சென்று, அதன் பின்னர் கொல்லவும் இந்த இருவரும் திட்டமிட்டுள்ளனர். ஆனால் இந்த சதி திட்டம் எப்போது அம்பலமானது என்பது தொடர்பில் உறுதியான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதனிடையே, உக்ரைன் தரப்பு அம்பலப்படுத்தியுள்ள இந்த சதி குறித்து ரஷ்யா இதுவரை பதிலளிக்கவில்லை. ஆனால், இதுவரை ரஷ்யா முன்னெடுத்த 5 படுகொலை சதியில் இருந்து தாம் தப்பியுள்ளதாக கடந்த ஆண்டு ஜெலென்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
மேலும், ஜனாதிபதிக்கு மிக நெருக்கமான பாதுகாப்பு அதிகாரிகளையும் படுகொலை செய்ய அந்த குழு திட்டமிட்டிருந்ததாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.