சென்னையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்: காதலன் கைது

1549271282 crime new

சென்னையில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட இளம் பெண்: காதலன் கைது

சென்னையில் காதலிக்க மறுத்த இளம்பெண் ஒருவரை காதலன் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் மென் பொறியாளராக பணியாற்றி வரும் நந்தினி(25) என்ற பெண்ணை வெற்றிமாறன் என்ற இளைஞர் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளார்.

ஆனால் நந்தினி வேறொரு நபருடன் நட்புறவுடன் பழகி வந்ததால் வெற்றிமாறன் ஆத்திரமடைந்தாக செல்லப்படுகிறது.

இந்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள பொன்மாரில் நந்தினியை காதலன் வெற்றிமாறன் கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார்.

இளம் பெண் நந்தினியின் கை, கால்களை சங்கிலியால் கட்டிப்போட்டு தாழம்பூர் அருகே காதலன் வெற்றிமாறன் எரித்து கொலை செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து காதலன் வெற்றிமாறனை உடனடியாக கைது செய்த பொலிஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version