R scaled
உலகம்செய்திகள்

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு

Share

இந்திய மல்யுத்த சங்கம் சஸ்பெண்ட் : ஒன்றிய அரசு உத்தரவு

மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய மல்யுத்த சங்கத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு உள்ளான பிரிஷ் யூஷனின் ஆதரவாளரான சஞ்சய் சிங்கே மீண்டும் இந்திய மல்யுத்த சங்கத்தின் தலைவராக நியமிக்கப்பட்டது குறித்து, டெல்லியில் பல நாட்கள் போராட்டம் நடத்திய வீரர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தன்னுடைய இத்தனை ஆண்டு கால கடின உழைப்பு அனைத்தையும் கைவிட்டு, ‘நான் மல்யுத்தத்தில் இருந்து விலகுகிறேன்’ என கண்ணீருடன் அறிவித்தார்.

இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, அதே சமயம் இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்தார்.

இவை இந்திய மல்யுத்த சங்கம் மற்றும் மத்திய பாஜக அரசு மீது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்திய மல்யுத்த சங்கத்தை சஸ்பெண்ட் செய்து மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

பிரிஷ் பூஷன் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த சங்கத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டதை மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
25 68f59693a092d
செய்திகள்இலங்கை

கனமழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு; புத்தளம் மக்களுக்கு எச்சரிக்கை!

பெய்து வரும் கனமழை காரணமாக தெதுரு ஓயா, ராஜாங்கனை மற்றும் அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக...

6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...