உலகின் மிகப்பெரிய மர நகரத்தை உருவாக்க ஸ்வீடன் திட்டமிட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம் வூட் சிட்டி என அழைக்கப்படும் இந்த திட்டத்தை கட்டியெழுப்பவுள்ள Atrium Ljungberg நிறுவனம், உலகில் இதுவரை வேறு எந்த கட்டுமானத்திற்கும் பயன்படுத்தப்படாத அளவிற்கு அதிக மரங்களைப் பயன்படுத்த உள்ளதால், இதனை ‘world’s largest wooden city’ என பெயரிட்டது.
நவீனகட்டுமான திட்டங்களைப் போலவே, மர நகர வீடுகள் அடித்தளத்தில் சில கான்கிரீட் மற்றும் எஃகு பயன்படுத்தப்படும், ஆனால் அதன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.
மரத்தாலான கட்டிடங்கள் இலகுவாக இருப்பதால் அவற்றின் அடித்தளமும் சிறியதாக இருக்கும் என்கிறார் நிறுவனத்தின் தலைவர் அன்னிகா அனஸ்.
மர வீடுகள் அவற்றின் கட்டுமானத்தில் மலிவானதாகவும் சத்தம் குறைவாகவும் இருக்கும். ஆனால், மர கட்டிடங்களின் மிகப்பெரிய கவலை தீ. இதற்காக, வூட் சிட்டியின் கட்டிடங்களில் பல தீ பாதுகாப்பு அமைப்புகள் நிறுவப்படும்.நகரத்தில் ஸ்பிரிங்க்லர் மற்றும் ஃப்ளேம் ரெசிஸ்டண்ட் லேயர் இருக்கும்.
இந்த திட்டம் கான்கிரீட் மற்றும் எஃகு கட்டுமானத்துடன் ஒப்பிடும்போது கார்பன் தடயத்தை 40% குறைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
2.5 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 2,000 வீடுகள், 7,000 அலுவலகங்கள், உணவகங்கள் மற்றும் கடைகள் இருக்கும்.
இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.43,000 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம், ஸ்வீடனில் உள்ள நகர்ப்புற மேம்பாட்டு நிறுவனமான ஏட்ரியம் ஜங்பெர்க் தலைமையில் 2025ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 2027-ல் நிறைவடையும் என கூறப்படுகிறது.
Leave a comment