அமெரிக்காவின் கலிபோர்னியாவில், பிறந்த இரட்டைக் குழந்தைகள் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளன.
பாத்திமா மாட்ரிகல் மற்றும் ராபர்ட் ட்ருஜிலோ தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ள நிலையில், அவை பிறந்த நேரம் அதிசயிக்க வைத்துள்ளது.
முதல் குழந்தை 2021 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு 11.45மணிக்கும், இரண்டாவது குழந்தை சரியாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்துள்ளது.
15 நிமிட இடைவெளியில் இந்த இரட்டை குழந்தைகள் பிறந்திருந்தாலும் அவற்றின் வருடமே மாறியுள்ளது. இது மிகவும் அரிதான நிகழ்வு எனவும் கூறப்படுகின்றது.
#World